fbpx

500 கி.மீ. ஓடிய பைக்கை வாடிக்கையாளர் தலையில் கட்ட பார்த்த ஓலா நிறுவனம்..!! திடுக்கிடும் பின்னணி..!!

சென்னை கொண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஷோரூமுக்கு பைக் வாங்க சென்றிருக்கிறார். ஆசை ஆசையாக பைக் வாங்க வந்த ஸ்ரீதர், முதற்கட்டமாக ரூ.25 ஆயிரம் செலுத்தியதோடு எஞ்சிய பணத்தை ஓலா நிறுவனம் மூலமே ஐடிஎப்சி வங்கியில் லோன் போட்டு செலுத்தியிருக்கிறார். வங்கியில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ தொகையை செலுத்த தொடங்கிய ஸ்ரீதருக்கு, வண்டி மட்டும் கிடைத்த பாடில்லை. இதனையடுத்து, பெரிய போராட்டத்திற்கு பிறகு வண்டியை வந்து வாங்கிக் கொள்ளுமாறு ஸ்ரீதருக்கு ஓலா ஷோரூமில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

இதனை நம்பிய ஸ்ரீதர், மிகுந்த எதிர்பார்ப்போடு கிண்டியில் உள்ள ஓலா ஷோரூமிற்கு செல்லவே, அங்கு 500 கிலோ மீட்டர் ஓடிய பழைய வண்டியை கொடுத்துள்ளனர். அதோடு பைக்கில் சில பொருட்கள் அடிவாங்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், அங்கிருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, ’இந்த வண்டியை எடுத்துட்டு போங்க இல்லன்னா எங்க ஆர்டர் கொடுத்தீங்களோ அங்கு போய் கேளுங்கள்’ என அலட்சியமாக பதில் அளித்திருக்கின்றனர்.

கடன் வாங்கி பைக் வாங்க நினைத்தவருக்கு ஓலா நிறுவனம் அல்வா கொடுத்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த ஸ்ரீதர், ஓலா நிறுவனத்தின் அடிமட்ட ஊழியர்களில் ஆரம்பித்து உயர்மட்ட அதிகாரிகள் வரை மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்திருக்கிறார். ஆனால், ஓலா நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த மெயிலை கூட ஓபன் பண்ணி பார்க்கவில்லை என்பது பாதிக்கப்பட்டவர் ரீஜினல் சீனியர் மேனேஜர் சுரேஷ் மகாதேவனிடம் பேசிய ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பேசும் போது லோக்கல் மேனேஜரை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என பேசிய சுரேஷ் மகாதேவன், பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் வாய்ஸ் உயர்த்தி பேசியதும், அப்டேட் ஸ்டேட்டஸ் தெரிந்து கொண்டுதான் பேசுகிறேன் என்று தான் சொன்னேன் என அப்பட்டமாக பேசுகிறார்.

வாடிக்கையாளரிடம் ஒரு மாதிரி பேசிவிட்டு சம்பந்தப்பட்ட பிரான்ச் மேனேஜர் பரமேஸ்வரனை தொடர்பு கொண்டு பேசிய சுரேஷ் மகாதேவன், என் செல்போன் என்னை ஏன் கொடுத்தீர்கள்? என எகிறி கடிந்து கொண்டதும் ஆடியோ மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்ரீதர் பைக் புக் செய்த சிந்தாதிரிப்பேட்டை ஓலா ஷோரூமில் 3 மேனேஜர்கள் மாறியும் கூட அவருக்கு புதிய வண்டி கிடைத்த பாடில்லை. வாகன பதிவு செய்ய வர சொல்லும் போது கூட வண்டியை காட்டாமல் கமுக்கமாக வைத்திருந்த ஓலா நிறுவனம், டெலிவரி எடுக்கும் போது பழைய வண்டியை தலையில் கட்ட பார்த்திருக்கிறார்கள்.

அதோடு, ஏற்கனவே பல கிலோமீட்டர் தூரம் ஓடிய பைக்கை புதுசு போல விற்பனை செய்வதாக மற்றொரு மேனேஜரிடம் ஸ்ரீதர் கேட்டபோது, அதே பைக்கில் பழுதை நீக்கி கிலோ மீட்டரை ரீசெட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என ஆசால்டாக கூறி அதிர வைத்ததால் ஏமாற்றத்தின் உச்சத்திற்கே சென்றார் வாடிக்கையாளர் ஸ்ரீதர். 5 நாட்களில் பைக் டெலிவரி செய்யப்படும் என பணத்தை பிடுங்கிக் கொண்டதோடு பழைய பைக்கை கொடுத்து மன உளைச்சல் ஏற்படுத்திய ஓலா நிறுவனத்தின் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

அழகான உதடுக்கு ஆசைப்பட்ட மாடல்..!! இறுதியில் படுபயங்கரமாக மாறிய லிப்ஸ்..!!

Tue Apr 18 , 2023
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெசிக்கா புர்கோ. இவர் சமூக ஊடகவியலாளர் மற்றும் மாடல் அழகியாகவும் உள்ளார். இவர் உதட்டை அழகாக்குவதற்காக லிப் ஃபில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்துள்ளார். இதுவரை அவர் 6 முறை அந்த சிகிச்சையை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு மருத்துவர் போன் செய்து தற்போது மார்க்கெட்டில் புதிதாக லிப் பில்லர் வந்துள்ளது. அதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன், வாருங்கள் என கூறியுள்ளார். ஜெசிக்காவும் கூடுதல் அழகை […]
அழகான உதடுக்கு ஆசைப்பட்ட மாடல்..!! இறுதியில் படுபயங்கரமாக மாறிய லிப்ஸ்..!!

You May Like