Mpox: காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் மாபெரும் மோதல் காரணமாக, சுமார் 500 mpox நோயாளிகள் சிகிச்சை மையங்களை விட்டு தப்பியுள்ளனர்.
ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC)படி, கடந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் mpox காரணமாக 900 பேர் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது மேலும் தொற்று நோயைப் பரப்பும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த சில வாரங்களில் ருவாண்டா, M23 கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால், கோமா மற்றும் புகாவுவில் உள்ள சிகிச்சை மையங்களில் இருந்து 500 Mpox நோயாளிகள் தப்பியோடியுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ உபகரண பொருட்களையும் எடுத்து சென்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC) கூறியதாவது, இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து காங்கோவில் சுமார் 2,890 mpox வழக்குகள் மற்றும் 180 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஜனவரி மாத இறுதியில் நடந்த மோதலை தொடர்ந்து கோமாவின் முகுங்கா சுகாதார மையத்திலிருந்து 128 நோயாளிகள் தப்பி ஓடினர். அவர்கள் தப்பிசென்றபோது மையத்திற்கு தீவைக்கப்பட்டும், நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை கிழித்தெறிந்தும் அட்டூழியம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
Readmore: தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு..!! உடலை மீட்கும் பணி தீவிரம்..!!