மருத்துவமனைக்குச் செல்லும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அசாம் மாநிலம் குவகாத்தியில் நடந்த சம்பவம். தனது மருமகனின் மருத்துவ அறிக்கையைக் காட்டுவதற்காகச் சென்ற பெண்ணிடம், பரிசோதனை என்ற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மருத்துவர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. குவகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவ அறிக்கையைக் காட்டச் சென்ற பெண்ணுடன் வந்த உறவினரை மருத்துவர் முதலில் வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், […]

பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. இத்தகைய சூழலில், சென்னையின் திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மீண்டும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் […]

குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சார்ந்தவர் 19 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் கணவரின் விவரம் குறித்து கேட்டதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து […]

நாட்டில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில மாநில அரசுகளாலும், மற்றவை மத்திய அரசாலும் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நோக்கம் ஏறக்குறைய ஒன்றுதான். ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்குப் பலன்களை வழங்குவது. பல திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை அனுப்புகின்றன. இருப்பினும், பல திட்டங்கள் மானியங்கள் அல்லது பொருட்கள் போன்ற பிற உதவிகளை வழங்குகின்றன. உதாரணமாக, ஆயுஷ்மான் அட்டை அத்தகைய ஒரு திட்டமாகும். இதில் தகுதியுள்ளவர்களுக்கு […]

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்‌. காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் […]

பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு […]

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சிரப்பால் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் சிரப்பால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்து பாட்டிலில் […]

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு.‌ கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுகுணா உயிரிழப்பு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் […]