fbpx

‘Money Heist’ பாணியில் சாலையில் சிதறிய 500 ரூபாய் நோட்டுகள்!! போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்! – என்ன நடந்தது?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து தேனி செல்லும் சாலையில் மாமரத்துபட்டி விலக்கு பகுதியில், தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையெங்கும் கிடந்தது. சாலையில் 100 மீட்டர் தொலைவிற்கு சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், அப்பகுதியிலிருந்தவர்கள் என அனைவரும் அள்ளி சென்றனர்.

சுமார் 3 லட்சம் மதிப்பிலான இந்த 500 ரூபாய் நோட்டுகள் அவ்வழியாக வந்த
இருசக்கர வாகனத்திலிருந்தோ, பேருந்திலிருந்தோ வீசப்பட்டதா? அல்லது தவறி கீழே விழுந்ததா என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பணம் குறித்து யாரும் புகார் அளிக்காத சூழலில், புகார் அளித்தாலும் பொதுமக்களால் அள்ளி செல்லப்பட்ட பணத்தை மீட்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English Summary

500 rupees worth 3 lakhs scattered on the road in Usilampatti
The public carried the notes.

Next Post

ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கமா? இறந்த பின்னும் போராடும் ஆம்ஸ்ட்ராங்!! நீதிமன்றத்தில் நடந்த விவாதம் என்ன?

Sun Jul 7 , 2024
Armstrong's wife appealed to the judge to respond to the decision of the case regarding the burial of Armstrong's body at the office of the party at 12 o'clock.

You May Like