fbpx

மக்களே..! வரும் 10, 11 தேதிகளில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

வரும் 10, 11 தேதிகளில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது ‌.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வரும் 10, 11 தேதிகளில் முகூர்த்தம் மற்றும் வார கடைசி நாட்கள் என்பதால் வரும் 9-ம் தேதி (வெள்ளி) சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் நாளை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அன்றைய தினம் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11,429 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அயோத்தியில் சைவ உணவுகளை மட்டும் விற்க KFC-க்கு அனுமதி...!

Thu Feb 8 , 2024
அயோத்தியில் சைவ உணவுகளை மட்டும் விற்க KFCக்கு அனுமதி. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. 2.27 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் 90% முடிவடைந்த நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22 -ம் […]

You May Like