இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட உள்ளன. அதே போல காஞ்சிபுரம் வடக்கு பகுதியில்15 கடைகளும் மற்றும் தென் பகுதியில் 16கடைகளும் மூடப்பட உள்ளன. திருவள்ளூர் கிழக்கு பகுதியில் 32 கடைகளும், மேற்கு பகுதியில் 14 கடைகளும் மூடப்படவுள்ளன. மதுரை மண்டலத்தில் 125 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 கடைகளும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 78 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59. கடைகளும் மூடப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.