fbpx

தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்…..! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை……..!

தமிழகத்தில் இருக்கின்ற 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் உடனடியாக மூடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வை துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை மானியை கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதல்வரின் உத்தரவின் பேரில் 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்டறிந்து மூட 20.4.2023 அன்று வெளியிட்ட அரசாணை எண் 140 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையை செயல்படுத்தும் விதத்தில் மாநிலம் முழுவம் இருக்கின்ற சில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22-6-2023 அன்று முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது அதன்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள 500 சில்லறை விற்பனை கடைகள் நாளை முதல் செயல்படாது என கூறப்பட்டுள்ளது.

Next Post

வாகனம் வாங்கப் போறீங்களா..? 10 வருட வாரண்டி..!! ஹோண்டா நிறுவனத்தின் புதிய திட்டம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Jun 21 , 2023
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா எக்ஸ்டெண்டெட் வாரண்ட்டி பிளஸ் (Extended Warranty Plus- EW Plus) எனப்படும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. EW Plus திட்டம் மூலமாக வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கிய 91 நாட்கள் முதல் 9 ஆண்டுகள் வரை எக்ஸ்டெண்டெட் வாரண்ட்டி ஆப்ஷனை தேர்வு செய்வதற்கான அனுமதியை தருகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 10 வருட காம்ப்ரிஹென்சி வாரண்ட்டி கவரேஜ் தருவது மட்டுமின்றி, பல […]

You May Like