24 ஆம் தேதி பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 50000 பேர் திமுகவில் இணை உள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவு பெற்ற பணிகளைத் தொடங்கி வைக்க கோவைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் 23-ம் தேதி செல்கிறார்.23-ம் தேதி கோவையில் இரவு தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் 24-ம் தேதி காலை கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாலையில் பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மற்ற கட்சியினர் திமுகவில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.
இது குறித்து உன் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்; தமிழ்நாடு முன்னேற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியே தேவை என்று உணர்ந்து, 50,000க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர், ஆகஸ்ட் 24 அன்று, கழகத்தில் இணையும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.