fbpx

European Union | 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்.!! ஐரோப்பிய யூனியன் வெளியிட்டு அதிர்ச்சி தகவல்.!!

European Union: 527 இந்திய தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனமான எத்திலீன் ஆக்சைடு இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் 54 தயாரிப்புகள் ஆர்கானிக் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. உலர் பழங்கள் எள் விதைகள் மசாலாக்கள் மூலிகைகள் மற்றும் டயட் உணவுகள் ஆகியவையும் இந்த பட்டியலில் இருக்கிறது.

உலர் பழங்கள் மற்றும் எள் விதைகளில் எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பதாக 313 வழக்குகளும் மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களில் எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பதாக 60 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டயட் உணவுப் பொருட்கள் தொடர்பாக 48 வழக்குகளும் பிற உணவுப் பொருட்களில் எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பது தொடர்பாக 34 வழக்குகள் செப்டம்பர் 2020 மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உணவு மற்றும் ஊட்டத்திற்கான ரேபிட் அலர்ட் சிஸ்டத்தின் (RASFF) தரவுகள் தெரிவிக்கிறது.

எள் விதைகள், கருப்பு மிளகு மற்றும் அஸ்வகந்தா போன்றவற்றில் எத்திலியின் ஆக்சைடு கலந்திருந்த போதும் சில சமயங்களில் அவை ஆர்கானிக் என்ற முத்திரையுடன் வந்திருக்கிறது. மேலும் சில தயாரிப்புகளில் எத்திலி நாக்சைடு கலக்கப்பட்டு இருக்கிறது ஆனாலும் அந்த உணவுப் பொருட்கள் பிரீமியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்’ என்று லேபிள்களுடன் வந்துள்ளது. இவற்றில் 87 பொருட்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பொருட்கள் சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

ஐரோப்பிய யூனியன்(European Union) 1991 ஆம் ஆண்டு முதல் எத்தனை நாக்சைடை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்தது. எனினும் இறக்குமதியின் அதிகரிப்பு மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க அதிகாரிகளை தோன்றியது. எத்திலீன் ஆக்சைடு ஒரு மரபணு நச்சுப் புற்றுநோய் என உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலம் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் தயாரிப்பில் எத்திலின் ஆக்சைடு இருப்பது ஒரு போதும் பாதுகாப்பான அளவை தராது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020-21 ஆம் ஆண்டில் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 468 பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு மாசு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு வகையான தயாரிப்புகளில் உணவு சேர்க்கையாகப் பயன்படுத்தப்படும் வெட்டுக்கிளி பீன் கம்மில் இந்த நச்சு ரசாயனம் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றிலேயே முதல்முறையாக மிகப்பெரிய அளவிலான உணவுப் பொருட்களை திருப்பி அனுப்பினர்.

எத்திலீன் ஆக்சைடு நேரடியாக வெளிப்படுவதைத் தவிர, உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதால் உற்பத்தி செய்யப்படும் இரண்டு இரசாயனங்களுக்கு நுகர்வோர் எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்று ராமையா அட்வான்ஸ்டு டெஸ்டிங் லேப்ஸின் தலைமை இயக்க அதிகாரி ஜூபின் ஜார்ஜ் ஜோசப் குறிப்பிட்டார்.

Read More: Lok Sabha Election: “மோடியும், அமித் ஷாவும் நாட்டை கூறு போட்டு விற்று விட்டார்கள்..” மல்லிகார்ஜுனா கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு.!

Next Post

PMO Modi | பிரதமர் மோடி பேச்சுக்கு அதிருப்தி.!! பாஜக சிறுபான்மை அணி தலைவர் அதிரடி நீக்கம்.!!

Wed Apr 24 , 2024
PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. 18-வது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் கேரளா கர்நாடக மற்றும் ராஜஸ்தான் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 […]

You May Like