fbpx

நாளை முதல் 5ஜி சேவை தொடங்கியது… தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

அதிவேக இணைய வசதியை பெற, 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருக்கும் பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி அலைவரிசையை, தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 “புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்” என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

5ஜி அலைவரிசையை பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

Baskar

Next Post

அடேங்கப்பா...!! இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ..!!

Fri Sep 30 , 2022
கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 19 கோடி ரூபாய் வசூலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் முன்னணி மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராமில், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனல்டோவை 484 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் ஒரு பதிவுக்கு, அவர் இந்திய மதிப்பில் ரூ.19 கோடி வசூல் செய்வதாக ஒரு தனியார் நிறுவனத்தின் […]

You May Like