போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி இளம்பெண்ணுக்கு அடிக்கடி போலீஸ் எஸ்.பி. பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஆசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்தில் தினமும் பயிற்சி எடுத்து வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு போலீஸ் எஸ்ஐ உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக்கிக் கொண்ட எஸ்.ஐ. அந்த பெண்ணுக்கு வலை விரித்துள்ளார். அதன்படி, அந்த பெண்ணிடம் போலீஸ் வேலையில் சேர்வதற்கான அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி அந்த இளம்பெண்ணும் எஸ்.ஐ. உடன் பல இடங்களுக்குச் சென்று அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் எஸ்.ஐ. கொடுத்த பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த எஸ்.ஐ. மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அவர் மீது ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த எஸ்.ஐ. இடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.