தமிழ்நாட்டில் சுமார் 6.11 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு பருவத்தில் 3,393 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 3.83 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 29.46 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் 19.62 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கும். தமிழ்நாட்டில் சுமார் 6.11 லட்சம் கார்டுகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளனர். 27.75 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 16.10 லட்சம் ரேஷன் கார்டுகள், முன்னுரிமை கார்டுகளாக வகை மாற்றப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து ரேஷன் மூலம் 15.78 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் தற்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும், விண்ணப்பத்திற்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இனி ரேஷன் கார்டு தொலைந்து விட்டால், நகல் அட்டையை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் 50 ரூபாய் பணம் செலுத்தினால், அஞ்சல் துறை மூலமாக வீடுகளுக்கே, ரேஷன் அட்டை வந்து சேரும். இந்த திட்டத்தின் மூலமாக 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைந்து போன அட்டைக்கு பதிலாக புதிய அட்டையை பெற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது..!! மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!