fbpx

6 பீர் குடித்துவிட்டு தாயின் கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! இளம்பெண் திடீர் மரணம்..!! நடந்தது என்ன..?

சென்னை தரமணி பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் 60 வயது நபருடன் 27 வயது இளம்பெண் ஒருவர் அறை எடுத்து தங்கியிருந்தனர். அப்போது, இருவரும் பீர் குடித்துவிட்டு மதுபோதையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இளம்பெண் அடுத்தடுத்து 4 பீர் பாட்டில்களைக் குடித்துவிட்டு, உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காலையில் எழுந்து மீண்டும் 2 பாட்டில் பீரை குடித்துள்ளார். இதானால், அவர் உயிரிழந்துள்ளார். சொகுசு விடுதியில் இளம்பெண் மரணமடைந்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வேளச்சேரி போலீசார், விடுதி அறையில் இருந்த இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அறையில் இருந்த 60 வயது முதியவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜோதி (60) என்பதும், வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா (50) என்பவருடன் கள்ளக்காதல் வைத்திருந்ததும் தெரியவந்தது. ஒரு கட்டத்தில் சசிகலா இறந்த நிலையில், சசிகலாவின் 2-வது மகள் ரம்யாவுடன் (27) முதியவர் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை இருவரும் வேளச்சேரி தரமணியில் சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ரம்யாவுக்கு குடிக்கும் பழக்கம் இருந்ததால் 6 பீர் பாட்டில்களை வாங்கி, அதில் 4 பீர்களை ரம்யா குடித்துள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக அங்கு இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை மீதமிருந்த 2 பீர் பாட்டில்களையும் ரம்யா குடித்துள்ளார். பின்னர், மீண்டும் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி ரம்யா மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, ரம்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறி, போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து முதியவர் ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யா அதிகளவில் குடித்ததால் இறந்தரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More : ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை..!! டிகிரி முடிந்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Ramya drank the remaining 2 bottles of beer. Later, while the two were having fun again, Ramya fainted after complaining of chest pain.

Chella

Next Post

இன்ஸ்டா காதலனுடன் 2-வது திருமணம்..!! தடையாக இருந்த 5 வயது குழந்தை..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!

Mon Nov 25 , 2024
The shocking incident of a mother killing her 5-year-old daughter for interfering with her second marriage has left her shocked.

You May Like