fbpx

பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை  .. உஷார் மக்களே !!

பட்டாசு வெடித்தால் 6 மாதத்திற்கு சிறைத்தண்டனை என அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. பல மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் பட்டாசு வெடித்தால் 6 மாதத்திற்கு சிறைத்தண்டனையும் , ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி தலைநகர் டெல்லியில் பட்டாசு தயாரித்தல் , பட்டாசுகளை சேமித்தல் , விற்பனை செய்வது , வெடிபொருள் சட்டத்தின் 9-பி பிரிவின் கீழ் ரூ.5000 வரை அபராதம் , 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளின் உற்பத்தி , விற்பனை மற்றம் பயன்பாடு ஜனவரி 2023ம் ஆண்டு 1ம் தேதி வரை முழுமயாக தடை விதித்துள்ளது டெல்லி அரசு 

இதனிடையே விளக்கை ஏற்றி தீபாவளித்திருநாளை கொண்டாடுங்கள் என வலியுறுத்தி  உள்ள டெல்லி அரசு’’ தியே ஜலாவோ படகே நஹி ’’ என்ற பொது விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண் வருகின்றது. இதையடுத்து டெல்லி அரசு சார்பில் தீபங்கள் ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூங்காக்களில் தீப ஒளித்திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனை கண்காணிக்க 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை உதவி ஆணையர்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த்துறை 165 குழுக்களையும் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக்குவை அமைத்துள்ளது.

அக்டோபர் 16ம் தேதி விதிகளை மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதாக 188 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Post

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அட்டகாசமான ஆஃபர் !!!

Wed Oct 19 , 2022
ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அட்டகாசமான ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீபாவளி பரிசு சலுகையாக இருக்கும் என அறிவித்துள்ளது. ஜியோ வெளியிட்டுள்ள இந்த திட்டத்தின் பெயர் டபுள் ஃபெஸ்டிவல் போனான்சா என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜியோ சலுகையால் வாடிக்கையாளர்கள் செலுத்திய முழு பணமும் அவருக்கே திரும்ப கிடைக்கும் என்றால் பாருங்களேன்… அப்போ அட்டகாசமான ஆஃபர்தானே … இந்தியாவில் 5 ஜி சேவைகள் அறிமுகமாகிவிட்டால் கூட அது சர்வசாதாரணமாக மாற இன்னும் இரண்டு […]

You May Like