fbpx

Ujani Dam | அணையில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி..? உடலை தேடும் பணி தீவிரம்..!!

உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியை மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கலாஷி கிராமத்தில் உஜ்ஜைனி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் நிலைகளை ஒட்டி சில கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராம மக்கள் வெளி ஊர்களுக்கு மூலம்தான் பயணிக்கின்றனர். கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க தினமும் படகு மூலம் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை வழக்கம்போல், வெளியூருக்கு சென்று திரும்பும்போது உள்ளூர் மக்கள் வந்த படகு ஒன்று கவிழ்ந்திருக்கிறது.

படகில் மொத்தம் 7 பேர் பயணித்ததாகவும், ஒருவர் மட்டும் பத்திரமாக நீச்சலடித்து கரை சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாக படகு கவிழந்து விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மூளையை உண்ணும் அமீபா நோய்..!! 5 வயது சிறுமி திடீர் மரணம்..!! கேரளாவில் அதிர்ச்சி..!!

English Summary

Six people remain missing after a boat capsized in the Ujani dam waters near Kalashi village in Maharashtra, with rescue operations underway.

Chella

Next Post

100 யூனிட் இலவச மின்சாரத்தை இப்படி பயன்படுத்துறீங்களா..? ஸ்பாட்டுக்கு வரும் அதிகாரிகள்..!! மக்களே உஷார்..!!

Wed May 22 , 2024
It has been reported that the Tamil Nadu Power Board has started the process of identifying those who are wrongly receiving the 100 unit subsidy provided by the Tamil Nadu government.

You May Like