உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மதியம் 12 மணி நிலவரப்படி ஜார்கண்ட் மாநிலத்தின் டும்ரி தொகுதியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட யசோதா தேவி முன்னிலையில் உள்ளார். கேரளா மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலையில் உள்ளார். திரிபுரா பாக்ஷா நகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட டஃபஜிஜால் ஹூசைனும், தனாபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தீனபந்தும் வெற்றி பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் கோஷி தொகுதியில் போட்டியிட்ட சுதாகர் சிங் முன்னிலை வகித்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலம் பகேஷ்வர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பார்வாடி தாஸ் முன்னணியில் உள்ளார். மேற்கு வங்க மாநிலம் துப்குரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தபாசி ராய் முன்னணியில் உள்ளார்.