fbpx

சூப்பர் திட்டம்…! மகளிருக்கு அரசு வழங்கும் 60% மானியம்‌…! எப்படி பெறுவது..? முழு விவரம் இதோ…

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ வளர்த்தல்‌) ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது..

மீன்‌ விற்பனை அங்காடி (அலங்கார மீன்‌ வளர்ப்பு/மீன் அருங்காட்சியகம்‌ ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லது மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

கொல்லைப்புற அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (கடல்‌ அல்லது நன்னீர்‌) ரூ.3.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லது மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது..

புதிய மீன்‌ குஞ்சு வளர்ப்பு குளங்கள்‌ ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில்‌அமைத்தல்‌, திட்டத்தினில்‌ ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ‘ஆதிதிராவிடர்‌ மற்றும் மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள்‌ ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தினில்‌ ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும் மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

நன்னீர்‌ மீன்வளர்ப்பு குளங்களில்‌ ரூ.4.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

சிறிய அளவிலான பயோயிளாக்‌ குளங்களில்‌ ரூ.7.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மீன்‌ வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லது மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

நன்னீர்‌ மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக்‌ குளங்கள்‌ அமைத்தல்‌ மற்றும்‌ உள்ளீட்டு மானியம்‌ வழங்கும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கான’ செலவினமானரூ.14.00 இலட்சம்‌ செலவினத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பிரிவினருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

Vignesh

Next Post

ஜி-20 யின் 2-வது கலாச்சார பணிக்குழு கூட்டம் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது...!

Sun May 14 , 2023
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று முதல் 17-ம் தேதி வரை 2-வது கலாச்சார பணிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஜி-20 உறுப்பினர்கள், நட்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கலாச்சாரத் துறை எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனைகளைப் பற்றி இக்கூட்டம் விவாதிக்க உள்ளது. இந்தியாவின் ஜி-20 தலைமையில் கலாச்சார பணிக்குழு கூட்டங்கள் 4 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. அவை, கலாச்சாரச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, […]

You May Like