fbpx

மக்களே…! வெள்ள நிவாரணத் தொகை 6,000 ரூபாய்… ஆன்லைன் மூலம் கிடையாது…! அரசு அதிரடி முடிவு…!

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5,000லிருந்து ரூ.8,000 உயர்த்தி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிவாரண நிதியானது ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ரேஷன் மூலம் ரொக்கமாக நிவாரணம் வழங்கப்பட்டால் அதில் அதிக அளவு முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ரொக்கமாக நிவாரண நிதியை விநியோகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு; மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டபோது இதே பிரச்னைதான் எழுந்தது. வங்கியில் ஜீரோ பேலன்ஸ் முறையாக பராமரித்து இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இந்த வங்கி கணக்கில் அரசு பணம் செலுத்தும் போது உடனடியாக அந்த வங்கிகள் அபராத தொகையை பிடித்தம் செய்துவிடும் என்பதால், இந்த முறை அது போன்று நடக்காமல் இருக்க ரொக்கமாக நிவாரணம் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

2024 குரு பெயர்ச்சி.! மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்க இருக்கும் ராசிகள்.!

Tue Dec 12 , 2023
இன்னும் 20 நாட்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டனர். அவர்களது கணிப்பின்படி 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் குரு பெயர்ச்சி மட்டுமே நடைபெற இருக்கிறது. இந்த குரூப் பெயர்ச்சி மே மாதம் துவங்க இருக்கிறது. இது எந்த ராசிகளில் மாற்றங்களை கொண்டு வரும் […]

You May Like