ராஜபாளைம் அருகில் உள்ள அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் 63 வயதான மூதாட்டி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர் தனது பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அயன்கொல்லங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள காட்டில் வசித்து வருபவர் 55 வயதான முருகன். மூதாட்டி, முருகனை கோதுமை வாங்கித் தருவது சம்பந்தமாக பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மூதாட்டியை, முருகன் கீழே தள்ளி பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊர்த் தரப்பில், மூதாட்டியின் காலில் முருகனை விழவைத்து, மன்னிப்பு கேட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம் எனப் பேசியுள்ளனர். ஆனால் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். சொந்தமாக லோடு வேன் வைத்துள்ள முருகனின், மனைவி, சகோதரர் மற்றும் மகன் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.