fbpx

64 வயது மூதாட்டி கற்பழிப்பு.! நிர்வாண நிலையில் வீசப்பட்ட கொடூரம்.! இளைஞர் கைது.!

மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் 64 வயது மூதாட்டி கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மீட்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பையின் மகாராஷ்டிரா நகர் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி தனது பக்கத்து வீட்டைச் சார்ந்த 38 வயது இளைஞரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த இளைஞர் மூதாட்டியை வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மூதாட்டியை நிர்வாண நிலையில் தனது வீட்டிலிருந்து வெளியே வீசி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை சாலையில் செல்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது பக்கத்து வீட்டைச் சார்ந்த உமேஷ் தக் என்ற நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது தன்னுடைய மறைவான உறுப்புகளில் தாக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Post

”இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

Wed Dec 20 , 2023
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருப்பதால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிய உடனே அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில், சுமார் 2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில், இவை அனைத்து பள்ளிகளிலும் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் […]

You May Like