fbpx

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்!… பூமியை தாக்கிய சிறுகோள்!… டைனோசரின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தில் 65 ஆண்டுகளுக்கு முன் சிறுகோள் ஒன்று பூமியை தாக்கிய அதே நாளில் கொல்லப்பட்ட டைனோசரின் புதைபடிவங்களை ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஒரு காலத்துக்குப் பின்னர், முற்றிலுமாக அழிந்தன. மிகப்பெரிய சுற்றளவைக் கொண்ட விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதுதான் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் எனப் பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய மெக்சிகோவுக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் இந்த விண்கல் வந்து மோதியிருக்கக் கூடும். அதனால் ஏற்பட்ட பள்ளமானது Chicxulub என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 11 முதல் 81 கிலோமீட்டர் குறுக்களவைக் கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படும் அந்த மிகப்பெரிய விண்கல் மோதியபோது அதன் தாக்கம் பூமி முழுவதும் இருந்திருக்கிறது. குறிப்பாகக் கடல் பகுதியில் அதன் தாக்கம் அதிக அளவில் இருந்திருக்கிறது.

அதற்கான சான்றுகள் பல இடங்களில் கிடைத்து வருகின்றன. தற்போது அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதியில் கிடைத்திருக்கும் புதைபடிமம் அதுபோல ஒன்றுதான். இதில் பல மீன்கள் இறந்து போய் வடிவம் மாறாமல் அப்படியே புதைபடிமமாக மாறியிருக்கின்றன. இதன் மூலமாக டைனோசர்கள் அழிந்த தினத்தன்று பூமியில் என்ன நடந்திருக்கும் என்பது தெரியவந்துள்ளது என ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘விண்கல் பூமியைத் தாக்கி சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் கழித்து உருவான மிகப் பெரிய அலைகள் கடலில் இருந்து இந்த மீன்களை நிலத்தில் தூக்கி எறிந்திருக்கலாம் என்றும் அப்படியே அவை காலப்போக்கில் புதைபடிமமாக மாற்றம் பெற்றிருக்கலாம்’ எனவும் புதைபடிம ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் வடக்கு டகோட்டா பகுதியில் இருக்கும் டானிஷ் என்ற பகுதி பண்டைய கால ஆராய்ச்சிக்கு பெயர் போனது. அதாவது டைனோசர் கால படிமங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தீவிரமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு சுற்றி சுற்றி பல கிலோ மீட்டருக்கு பாறைகள்தான் காணப்படும். ஆனால் அந்த பாறைகள்தான் பல்வேறு முக்கியமாக வரலாற்று தகவல்களை சுமந்து இருக்கின்றன. இங்கு சுற்றி சுற்றி பல கிலோ மீட்டருக்கு பாறைகள்தான் காணப்படும். ஆனால் அந்த பாறைகள்தான் பல்வேறு முக்கியமாக வரலாற்று தகவல்களை சுமந்து இருக்கின்றன.

இந்த பாறைகள் என்பது Chicxulub விண்கல் பூமி மீது விழுந்த போது அதன் தாக்கத்தால் உருவான பாறைகள் ஆகும். இந்த விண்கல் மெக்சிகோவில் 65 மில்லியன் வருடங்களுக்கு முன் விழுந்தது ஆகும். இதுதான் மொத்தமாக டைனோசர்களின் அழிவிற்கு காரணமாக அமைந்தது. இதுவே மனித இனம் பின்பு தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. பண்டைய ஆறான டேனிஸ் ஆற்றின் நினைவாக இந்த பகுதிக்கு டேனிஸ் என்று பெயர் வைக்கப்பட்டு அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த டேனிஸ் பகுதியில்தான் தற்போது டைனோசர் ஒன்றின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாறைகளில் ஒடுங்கிய நிலையில் இந்த எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் என்ன வியப்பு என்றால் அந்த எலும்பை சுற்றி தோல், சதைகளும் இருந்து உள்ளன. பாறைகளுக்கு அடியே பல காலமாக இருந்தும் கூட இது அழியாமல் அப்படியே இருந்துள்ளது. அழகான கால்கள், கொடூரமான சொரசொரப்பான தோல்களுடன் இந்த படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில் கவனிக்க வேண்டிய விஷயம் பொதுவாக இங்கு கண்டுபிடிப்பட்ட டைனோசர் தடங்கள் எல்லாம் விண்கல் விழுவதற்கு முன் இறந்து போன டைனோசர் படிமங்கள்தான். ஆனால் இந்த ஒற்றை கால் மட்டும் சரியாக விண்கல் மோதி அதன் மூலம் ஏற்பட்ட அழிவால் பலியான டைனோசரின் கால் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்லது விண்கல் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பலியான டைனோசராக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இந்த டைனோசர் உடலில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங்கிங்கில் அவர் சரியாக 65 மில்லியன் வருடம் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் உடலில் சில படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை விண்கல்லில் இருந்து வந்த அந்நிய படிமங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக விண்கல் மூலம் பாதிக்கப்பட்டு பலியான டைனோசரின் கால் இதுவாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போக அதே பகுதியில் மீன்களும், ஆமைகளின் படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அருகில் கடல் இல்லை என்றாலும் மெக்சிகோவில் விழுந்த விண்கல் காரணமாக ஏற்பட்ட சுனாமி அலைகள், வெள்ளம் காரணமாக இந்த மீன்கள் இப்படி பாறைகள் இருக்கும் பகுதிக்கு அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த மீன்களின் உட்பகுதியில் பாறை துகள்கள், வேறு சில துகள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவைகளும் அந்நிய துகள்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை கார்பன் டேட்டிங் மூலம் சோதனை செய்ததில், அவையும் 66 வருடங்கள் பழமை வாய்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் மெக்சிகோவில் விழுந்த விண்கல் காரணமாக டேனிஸ் பகுதியில் சுகமாக… காற்று வாங்க போன.. டைனோசர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் மூலம் மேலும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

Kokila

Next Post

ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணியக்கூடாது!... ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு!... பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

Mon May 22 , 2023
அசாம் மாநில பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் குறியீட்டை வெளியிட்டது. அதில், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடக்கமற்ற ஆடைகளை அணிந்து பள்ளிக்கு பொது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தடை செய்யப்பட்ட ஆடைகளில், ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கான டி-சர்ட் […]

You May Like