பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் மூதாட்டியை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது. மேலும் அவரது கழுத்து மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மர்மம் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது .
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொடூர கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை சுனில் யாதவ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மூதாட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.