சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 65 வயதான லட்சுமி என்ற மூதாட்டி ஒருவர், யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில், மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த மூதாட்டியின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மூதாட்டியின் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த முத்து என்பவர் மீது அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் முத்துவை கடுமையாக தாக்கி, அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். முத்து, தனது இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி.
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வரும் மூதாட்டி லட்சுமிக்கும், அதே புகுதியில் பிச்சை எடுத்து வரும் 38 வயதான முத்துவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முத்து தான் மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மூதாட்டியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், முத்துவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முத்துவும் லட்சுமியும் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதை அடுத்து, இருவரும் இரு முறை உடலுறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், மூன்றாவது முறையாக முத்து மூதாட்டியுடன் உறவு கொள்ள முயன்ற போது தான், அவர் உடல் அசைவின்றி கிடந்ததாக முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் படியே, அவரது பிரேத பரிசோதனையின் முடிவில் மூதாட்டி இயற்கையாகவே மூதாட்டி மரணம் அடைந்திருக்கிறார் என்றும், அவறது உடலில் எந்த காயங்களும் இல்லை என தெரியவந்துள்ளது. 65 வயது மூதாட்டி என்பதால் அடுத்தடுத்து உடலுறவு கொண்டதால் அவருடைய இதய துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தமும் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. 50 வயதுக்கு மேல் அடுத்தடுத்து தொடர்ந்து உடலுறவு என்பது ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Read more: “அப்பா, அந்த அங்கிள் என்ன இங்க தொட்டாரு” கதறிய சிறுமி; பாசமாக பேசிய வாலிபர் செய்த காரியம்..