தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த மாதம் 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தற்போது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 24) மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் முடிந்தவரை இன்றே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணியிட விவரங்கள் : உதவி பொறியாளர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குநர், திட்டமிடல் அதிகாரி, புள்ளியில் அதிகாரி, ஜூனியர் மேனேஜர், வேதியியியல் அதிகாரி உள்ளிட்ட 53 அதிகாரிகள் பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி : பணிக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். துறை சார்ந்த பிரிவில் இளநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும். முழு தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு : 21 வயது நிரம்பியவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 32 வயது. சலுகைகளும் உண்டு.
தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே கிளிக் https://tnpsc.gov.in/Document/tamil/09_2024_CTS_NONOT_TAMIL_.pdf செய்யவும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் கிளிக் செய்யவும்.
Read More : Whatsapp-இல் வருகிறது சூப்பர் அப்டேட்..!! Voice to Text..!! ஆண்ட்ராய்டு பயனர்கள் ஹேப்பி..!!