தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி
பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு
வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8ஆம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6, 7ஆம் வகுப்புகளுக்கு 3ஆம் பருவ தேர்வு மதிப்பெண், கிரேடுகளை பதியுமாறும், 8ஆம் வகுப்புக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதியுமாறும் கூறப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து ஆசிரியர் குழு ஒப்புதலுடன் முடிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.