மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யாண் பகுதியில் 7 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வழக்கம் போல சென்ற அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை தேடி பல இடங்களில் அலைந்து திரிந்தனர்.
ஆனாலும், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு அருகில் இருந்த நீச்சல் குளத்தில் பிணமாக கிடப்பதாக போலீஸ் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். காவலாளியான நிதின் காம்லே என்பவர் அந்த சிறுவனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து சிறுவனை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுவனின் தாய்க்கும் அந்த செக்யூரிட்டி நிதின் காம்லேவிற்கும் தகாத உறவு இருந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தாயைப் பழிவாங்க மகனை பலி வாங்கிய சம்பவம் அரங்கேரி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்து இருக்கின்றது.