திருச்சி அருகே ரயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே கருமண்டபம் பகுதியில் வசித்து வருபவர் நாகலட்சுமி . ரயில்வேயில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கடைவீதிக்கும் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். உள்ளே சென்ற மர்ம நபர்கள் 70 சவரன் தங்க நகைகள் , ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.