தந்திரம், ஹாதிம் மற்றும் கஹானி கர் கர் கிய் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஜீதா கோச்சார். இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70.
கடந்த செப்டம்பர் 2021 இல் நடிகை ராஜீதாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது, இதை அடுத்து தொடர்ந்து அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி, மூச்சுத் திணறல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன்களை அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்கள் மத்தியில் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.