fbpx

உலகளவில் 7,000 கோடி! – இந்தியாவில் 300 கோடி வசூலை குவித்த அவதார்- தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம்…

அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலையும், இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார்  படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியை வசூலித்து மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இந்திய அளவில் மட்டும் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம் அதன் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

#Breaking: ஜனவரி-9.., தமிழக சபாநாயகர் வெளியிட்டக் முக்கிய தகவல்

Mon Dec 26 , 2022
2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 9ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்குகிவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மற்றம் செய்யப்பட்டது, மேலும் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like