இஸ்ரேல் மீது அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.அதன்பிறகு காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரபிக்கடல் மற்றும் செங்கடலில் இஸ்ரேல் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மறுப்புறம் அரபிக்கடல் மற்றும் செங்கடலில் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ கப்பல்களுக்கு இடையூறு செய்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர் படைகள் ஏமன் நாட்டில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது. இதனால் அமெரிக்க ராணுவம் அவர்களைத் தாக்கத் தொடங்கியது.அண்மையில் அமெரிக்கா, ஹவுதி கிளர்ச்சியாளர் படைகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மேற்கு ஏமனில் உள்ள ஹொடைடா மாகாணத்தின் எண்ணெய் எரிபொருள் துறைமுகத்தில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 74 பேர் உயிரிழந்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் துறைமுக ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது, சுமார் 171 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல், கடந்த மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரித்த இரான் பின்னணியுள்ள ஹூதி குழுவுக்கு எதிராக தனது விமான தாக்குதல்களை வலுப்படுத்திய பின்னர், ஏற்பட்ட மிகப்பெரிய மோசமான நாளாகும்.
மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர் , இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஹவுத்தி படைகள் இந்த துறைமுகத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வந்ததாகவும் அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏமனில் உள்ள ஹவுதி படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தங்கள் இராணுவ நடவடிக்கைகளை பிராந்தியத்தில் தொடருவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சபதம் செய்தனர். அதாவது, “காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு முற்றுகை நீக்கப்படும் வரை பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளைத் தொடர்வதில் இருந்து ஏமன் பின்வாங்காது” என்று ஹவுதிகள் தெரிவித்துள்ளன. ஏமனுக்கு எதிரான அமெரிக்காவின் “ஆக்கிரமிப்பு” “மேலும் இலக்கு, ஈடுபாடு மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும்” என்று அந்த குழு தெரிவித்துள்ளது.