fbpx

அசத்தல் அறிவிப்பு…! குரூப் தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7,500 உதவித்தொகை…!

நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊக்கத்தொகைக்கான 1000 பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 02.08.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 17.08.2023 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு 10.09.2023 அன்று நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு 30.08.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Vignesh

Next Post

அடுத்த சிக்கலில் ஓபிஎஸ்...! சொத்து குவிப்பு வழக்கில் இன்று விசாரணை...! தாமாக வழக்கை எடுத்த நீதிமன்றம்..!

Thu Aug 31 , 2023
ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கப்போவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தன்மீதான ஊழல் வழக்கை, மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ். பின்னர் வழக்கு சிவகங்கையிலுள்ள மாவட்ட […]

You May Like