மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டம், ரெத்யகேடா கிராமத்தில், 77 வயதான கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மாந்த்ரீகம் செய்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆம், ரெத்யகேடா கிராமத்தில் சைபு சதுர் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி, மூதாட்டி கமலா ஒரு சூனியக்காரி என்று கூறி தகராறு செய்துள்ளார். அவர் கூறியதை கேட்டு, அந்த கிராம மக்களும் அந்த மூதாட்டியை சூனியக்காரி என்று நம்பியுள்ளனர்.
இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த பாபு ஜாமுங்கர், சைபு சதுர், சாபுலால் சதுர், ராம்ஜி சதுர் மற்றும் சில நபர்கள், மூதாட்டியை தாக்கியது மட்டும் இல்லாமல், அவர் மீது மிளகாய் பொடித் தூவி, கழுத்தில் செருப்பை மாட்டி, சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். இதில் உச்சக்கட்டமாக மூதாட்டியை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கொடூர காட்சிகளை கிராமமே வேடிக்கை பார்த்த நிலையில், ஒருவர் கூட மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை.
இந்த கொடூர சம்பவம் கடந்த டிசம்பர் மாதம், 30 ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து, நேற்று முன்தினம் தான் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: பள்ளி வளாகத்தில், மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்!!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..