Bangladesh fishermens: எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 78 வங்கதேச மீனவர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாக்கும் நோக்கில், இந்தியக் கடலோரக் காவல்படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 78 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 160 டன் பொருட்கள் மற்றும் 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைதான அனைவரும் சிட்டகாங் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மீனவர்களை விசாரணைக்காக துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி எல்லை தாண்டி மீன் பிடிக்கும் அண்டை நாட்டு மீனவர்களை தடுக்க 484 கிலோமீட்டர் தொலைவுக்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
Readmore: தினமும் காபி குடிப்பதால் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் அதிகரிக்குமாம்!. ஆய்வில் தகவல்!.