விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள வீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை(80) இவர் தன்னுடைய மூத்த மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக, அவர் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தொடங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றுக்காக அவருடைய மகள் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில், தனியாக அந்த மூதாட்டி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த அதே தெருவில் எதிர் வீட்டைச் சேர்ந்த குகன்( 21) என்ற இளைஞர் அந்த மூதாட்டியை தூக்கி சென்று கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.
அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் இருக்கின்ற மருத்துவமனையில் சேர்த்து அந்த மருத்துவமனையில் அந்த மூதாட்டிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மூதாட்டியின் மகள் வீரம்மாள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.