fbpx

நாகை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

நாகை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலையத்தில் ஆண்டு தோறும் பெருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கிய வேளாங்கண்ணி பேராலய பெருவிழா வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி அன்னையின் பிறந்தநாள் விழா வருகின்ற 8-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனால் நாகை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செலாவணி முறிச்சட்டம்‌ 1881-ன்‌ கீழ்‌ வராது என்பதால்‌, அரசுப்‌ பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள்‌ கவனிக்கும்‌ பொருட்டு அன்றைய தினம்‌ சேலம்‌ மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலங்கள்‌ குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

இந்தியா-பாரத் பெயர் விவகாரம்!… தங்கள் பெயரை மாற்றிக்கொண்ட 7 நாடுகள் பற்றி தெரியுமா?

Wed Sep 6 , 2023
இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுவதாக தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே 7 நாடுகள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டுள்ளன. இந்தியாவின் பெயரை பாரத் என அதிகாரப்பூர்வமாக மாற்ற மோடி அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் அடுத்த சிறப்புக் கூட்டத்தொடரில் இது குறித்து மத்திய அரசு தீர்மானம் எடுக்கும் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன. அந்தவகையில் பெயரை மாற்றிக்கொண்ட நிகழ்வு பல நாடுகளில் அரசியல், கலாச்சார மற்றும் சமூக காரணிகளின் […]

You May Like