fbpx

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட சுகாதார துறையில் வேலை.. நல்ல சம்பளம்..!! – விண்ணப்பிக்க ரெடியா..?

காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: உணவியல் நிபுணர் (Dietician)-01, ஆய்வக நுட்புநர் நிலை 2 ( Lab.Technician Grade II), பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர் (Manifold Technician), பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist)-, ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்( ECG Tech), அறுவை அரங்கு நுட்புனர் (Theatre Tech), ஓட்டுநர் (Driver), லிப்ட் மெகானிக் (Lift Mechanic), ஏசி மெகானிக் (AC Mechanic), சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர் (Cyto Tech)., ஸ்டெரிலிசைசென் ஆப்ரேட்டர்(Sterilization Operator (CSSD Tech.Assistant), தொழில்சார் சிகிச்சையாளர்(Occupational Therapist),

மருந்தாளுநர் (Pharmacist), சமூக சேவகர் (Social Worker), கொதிகலன் மெக்கானிக் (Boiler Mechanic), அவுஸ் கீப்பர்(House Keeper), டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர்(Data Entry Operator), தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator), இரத்த வங்கி ஆலோசகர் (Blood Bank Counsellor), மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்(Anaesthesia Technician), ரேடியோகிராபர் (Radiographer), பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)

எலக்ட்ரீசியன் (Electrician Gr.II), அலுவலக உதவியாளர் (Office Assistant). பெண்/ஆண் செவிலிய உதவியாளர் (Female/Male Nursing Assistant), சமையலாளர்(Cook), நாவிதன் (Barber), சலவையாளர்(Dhobi), மேற்பார்வையாளர்(Supervisor), சுகாதார பணியாளர்(Housekeeping), பாதுகாவலர்(Security), மருத்துவமனை பணியாளர்.

கல்வித் தகுதி: இதில் விண்ணப்பிப்பதற்கு 8th, 10th, 12th, ITI, DMLT, Any Degree, D.Pharm/B.Pharm, BPT, Diploma in Radio Diagnosis Technician, B.Sc, BCA, M.Sc ஆகிய கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் முடித்திருக்க வேண்டும்.

சம்பள விபரம்: இந்த பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை பதவிக்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவங்களை https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்.

முகவரி: விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (speed post) மூலமாகவோ அனுப்பலாம். நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A. இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் 631 501. தொலைப்பேசி எண். 044 2722 2019 என்ற முகவரிக்கு 20.02.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more : தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன..!! – அண்ணாமலை கண்டனம்

English Summary

8th pass is enough… 276 vacancies in district health department

Next Post

முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! - விவரம் இதோ..

Mon Feb 17 , 2025
Chief Minister's Protecting Arms Scheme.. Who can apply..? Here are the details..

You May Like