மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த 8வது ஊதியக் குழுவை அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார்.
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே இந்தச் செய்தி பகிரப்பட்டிருந்தாலும், 8வது ஊதியக் குழுவை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ஏற்கும் செலவுகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
8வது ஊதியக் குழு
8வது ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026 இல் முடிவடைவதால், 2025 இல் செயல்முறையைத் தொடங்குவது அதன் நிறைவிற்கு முன் பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் போதுமான நேரத்தை உறுதி செய்கிறது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
இப்போது, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சம்பள அமைப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் சம்பள உயர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆர்வமாக உள்ளனர்.
8வது ஊதியக் கமிஷன் : ஃபிட்மென்ட் காரணி
8வது ஊதியக் கமிஷனை அமல்படுத்துவது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதியக் கமிஷனில் ஃபிட்மென்ட் காரணி 2.28 முதல் 2.86 வரை இருக்கலாம், இது அடிப்படை சம்பளத்தில் 40-50 சதவீதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 8வது ஊதியக் குழுவில் 2.6 முதல் 2.85 வரை ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. . ஃபிட்மென்ட் காரணி என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ஒரு காரணி ஆகும்.
8வது ஊதியக் கமிஷன் சம்பள கால்குலேட்டர்
2.6 முதல் 2.85 வரையிலான ஃபிட்மென்ட் காரணி, சம்பளத்தை 25-30 சதவீதம் மற்றும் ஓய்வூதியங்களை விகிதாசாரமாக அதிகரிக்கக்கூடும். “சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் செயல்திறன் ஊதியத்துடன் அடிப்படை குறைந்தபட்ச தொகை 40,000 ஐத் தாண்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8-வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தை 40-50 சதவீதம் உயர்த்த முடியும் என்று கூறப்படுகிறது. “உதாரணமாக, தற்போது ரூ.20,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒரு ஊழியர் தனது சம்பளத்தை ரூ.46,600 முதல் ரூ.57,200 வரை பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எவ்வளவு சம்பளம் உயரும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே தெரியவரும்.
7வது சம்பள கமிஷன் சம்பள உயர்வு
இதற்கிடையில், 7வது சம்பள கமிஷன் 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணியை அறிமுகப்படுத்தியது, இது சராசரியாக 23.55 சதவீத ஊதிய உயர்வுக்கு வழிவகுத்தது. அதற்கு முன்பு, 6வது சம்பள கமிஷன் 1.86 என்ற காரணியைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இந்த திட்டத்தில் பெண்களுக்கு வட்டி மட்டுமே ரூ.32,000 கிடைக்கும்.. அரசின் அசத்தல் திட்டம்..!