fbpx

8வது, பிளஸ் டூ மற்றும் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு!

புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக அங்கிருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் என மொத்தம் ஆறு ஆறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மெடிக்கல் ஆபிஸர் பணிகளுக்கான கல்வி தகுதியாக எம்பிபிஎஸ் மருத்துவ பட்டமும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்காக பனிரெண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது விலங்கியல் பிரிவுடன் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மருத்துவ உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது போதுமானது . இந்த வேலை வாய்ப்பு களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.02.2023.

இந்த வேலை வாய்ப்புகளில் மருத்துவ அதிகாரி பணிகளுக்கான வேலை வாய்ப்பு இருக்கு உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான உச்சபட்ச வயது வரம்பு 50. மேலும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான உச்சபட்ச வயது வரம்பாக 45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். மருத்துவ அதிகாரி பணிகளுக்கான ஊதியமாக 60 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான ஊதியமாக 14 ஆயிரம் ரூபாயும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான ஊதியமாக 8,500-யும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை அறிய www.pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

இத்தனை கோடி நஷ்டமா?... 225 சிறிய நகரங்களில் உணவு டெலிவரி சேவையை நிறுத்திய Zomato நிறுவனம் !

Tue Feb 14 , 2023
ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளதால் 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்தப் போவதாக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி தொழில்நுட்ப நிறுவனமான Zomato,மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த நிறுவனம் அதன் லாபத்தை அதிகரிக்க சமீபத்தில் தங்க சந்தாவை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் முடிவடைந்த […]

You May Like