12-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை தான் கடைசி தேதி என அறிவிப்பு…!

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள  உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூலை 7 -ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது. மேலும் நேற்று வரை 3,43,586 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 2,82,430 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 2,50,181 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்” என அவர் கூறியுள்ளார்.

Also Read: எல்லாம் ரெடியா இருங்க… TET தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!

Vignesh

Next Post

இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு...

Wed Jul 6 , 2022
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது.. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த 1-ம் தேதி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக […]
சிலிண்டர்

You May Like