நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த அமைச்சர் என்ற சாதனையை பெறுகிறார்..நிர்மலா சீதாராமன். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி காலங்களில் நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் 6 பட்ஜெட்டுகளை தொடர்ச்சியாக தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், 2019ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து முழு பட்ஜெட்டுகளையும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும், 2024 – 2025 முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 2025- 2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் புதிய சாதனையை படைக்க இருக்கிறார்.
இவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வரவில்லை. தமிழ்நாட்டின் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நிர்மலா தொடக்கத்தில் ஒரு விற்பனைப் பெண்ணாக (sales girl) தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், பாஜவில் இணைந்து குறுகிய காலத்தில் நம் நாட்டுக்கே நிதி அமைச்சரானார். இந்திய அளவில் அவர் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாகக் கருதப்படுகிறார்.
நிர்மலா சீதாராமன் 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ரயில்வேயில் பணிபுரிந்ததால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது கல்வியும் வெவ்வேறு நகரங்களில் இருந்தது. திருச்சியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பிற்காக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவர் இந்தோ-ஐரோப்பிய ஜவுளி வர்த்தகத்தில் தனது PhD படிப்பை முடித்தார். அங்குதான் டாக்டர் பரகலா பிரபாகரைச் சந்தித்து பின்னர் அவரை திருமணம் செய்துகொண்டார்.
ரசியலில் நுழைந்த நிர்மலா மெல்ல மெல்ல வளரத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை நிர்மலா சீதாராமனிடம் பாஜக ஒப்படைத்தது. 2019ஆம் ஆண்டில் அவருக்கு முழுநேர நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பாஜக அரசின் முதுகெலும்பே நிர்மலா சீதாராமன்தான் என்ற நிலை உருவானது.
ஒரு கேபினட் அமைச்சராக நிர்மலா சீதாராமனுக்கு மாதத்திற்கு ரூ.1,00,000 அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது. இதுதவிர, கள உதவித் தொகையாக 70,000 ரூபாய் கிடைக்கும். உத்தியோகபூர்வ உதவித் தொகை 60,000, விருந்தோம்பல் உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும். இது தவிர பங்களா, ஊழியர்கள், கார் என அனைத்து வசதிகளும் இவருக்கு உள்ளன. நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பைப் பார்த்தால், 2.53 கோடி, இதில், 1.87 கோடி அசையா சொத்து. 65.55 கோடி அசையா சொத்து.
Read more : Budget 2025 | தொடர்ந்து 8 வது முறையாக பட்ஜெட் தாக்கல்.. புது சாதனை படைக்கப்போகும் நிர்மலா சீதாராமன்!