பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்.. அவருக்கு வயது 69.
வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.. வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார்..
தமிழ் மொழிக்கு அடுத்த படியாக மலையாளத்தில் அதிக படங்களில் பிரதாப் நடித்துள்ளார்.. மேலும் மலையாளத்தில் பிரதாப் போத்தன் இயக்கிய ரிதுபேதம் (1987), டெய்சி (1988), ஆகிய 3 படங்களும் கேரளா முழுவதும் காதல் அலையை ஏற்படுத்தியது.. இதுதவிர சைதன்யா (1991) என்ற தெலுங்குத் திரைப்படத்தையும் அவர் இயக்கி உள்ளார்…
பிரதாப் போத்தன் 1985-ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்தார்.. இருப்பினும், அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை, 1986 இல் அவர்கள் பிரிந்தனர். பின்னர் அவர் 1990 இல் மூத்த கார்ப்பரேட் நிபுணராக இருந்த அமலா சத்தியநாத் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகு 1991 இல் கேயா என்ற மகள் பிறந்தார். அவர்களது திருமணமும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 இல் முடிந்தது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரதாப் போத்தன் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..