குஜராத்தின் நவ்சாரியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். நவ்சாரியில் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.
நவ்சாரியில் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்தும் காரும் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த ஒருவர் சூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, குஜராத் மாநிலம் நவ்சாரியின் டிஎஸ்பி விஎன் படேல் கூறியுள்ளார்.
பிடிஐ செய்தியின்படி, பேருந்தில் பயணம் செய்த ஒன்பது பேரில் எட்டு பேரும் சொகுசு பேருந்தின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று நவ்சாரி காவல்துறை கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய் கூறியுள்ளார். பேருந்தில் பயணித்தவர்கள் அங்கலேஷ்வரில் வசிப்பவர்கள் என்றும், வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.