fbpx

டெல்லி முதல்வரிடம் 9.5 மணி நேர விசாரணை…! எங்க கட்சியை முடக்க சதி நடக்கிறது…! கெஜ்ரிவால் குற்றச்சாட்டு…!

ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது.

இதைத் தொடர்ந்து அவரை மார்ச் 20-ம் தேதி வரை காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவை, ஏப்ரல் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு என சிபிஐ வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 9.5 மணி நேர விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், “மதுபான கொள்கையில் ஊழல் என்று சொல்வது பொய்யானது மற்றும் தவறான அரசியல். ஆம் ஆத்மி கட்சியை முடித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால், நாட்டு மக்கள் எங்களுடன் உள்ளனர் என கூறினார்.

Vignesh

Next Post

கோடை சீசன்!... சருமத்தை பராமரிக்க!... ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!

Mon Apr 17 , 2023
கோடை காலங்களில் சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டரை தவறாமல் பயன்படுத்தலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம். அனைவரும் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ரோஸ் வாட்டரும் முக்கிய பங்கு வகிக்கிறது.கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் சற்று அதிகமாகவே காணப்படும். ஏனெனில் நீர் சத்துதான் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. […]

You May Like