மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 90 வயதான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்க்கு அருகில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது கண்ணுக்கு மருந்து ஊற்றுவதற்கு யாரும் இல்லை என்று அப்பாவி போல் பேசிய முதியவர், சிறுமியை தனது வீட்டிற்க்கு வந்து கண்ணுக்கு மருந்து போடும்படி அழைத்துள்ளார். தாத்தா என்ற பழக்கத்தில், சிறுமி இறக்கப்பட்டு முதியவரின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சயடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றார், உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், 90 வயதான நாராயண சாமியை போக்சோ சட்டத்தின் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.