fbpx

Special Bus: வரும் 4,5 தேதிகளில் சென்னையில் இருந்து 965 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

வரும் 4,5 தேதிகள் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வரும் 4,5 தேதிகள் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 965 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு,திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு இன்று மற்றும் நாளை 655 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளன. இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

'ஸ்டீராய்டு க்ரீம் பயன்படுத்தினால் முகம் படுமோசமாகவிடும்' - எச்சரிக்கும் ஆய்வுகள்..

Fri May 3 , 2024
முகம் சிவப்பாக மாறுவதற்கு சிலர் ஸ்டீராய்டு க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இவை முக ஃபேர்னஸ் க்ரீம்கள் அல்ல, தோல் சார்ந்தவைகளுக்காக மருத்துவர் பரிந்துரைப்பது. ஆனால் இன்று பெரும்பாலானோர் இந்த ஸ்டீராய்டுகளை முக ஃபேர்னஸ் க்ரீம்களாக பயன்படுத்துகின்றனர். ஸ்டீராய் க்ரீம்களை அதிகளவில் பயன்படுத்தும்போது, சரும பிரச்னைகள் நிறைய ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்டீராய்டுகள் பொதுவாக சில முக்கிய நோய்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஸ்டீராய்டுகளை எந்த […]

You May Like