97th Oscars: 97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் அறிவிப்புக்கு முன்னதாக ரெட் கார்பெட் அணிவகுப்பில் பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
97வது அகாடமி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி திங்கள் காலை 5.30 மணி முதல் ஆஸ்கர் விருது விழா ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் மூவிஸ் உள்ளிட்டவற்றில் இந்தியர்கள் லைவாக காண ஒளிபரப்பப்படுகிறது. 2024 இல் வெளியிடப்பட்ட திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (AMPAS) சார்பாக விருது வழங்கப்படுகிறது. நகைச்சுவை நடிகரும் பாட்காஸ்டருமான கோனன் ஓ’பிரைன் முதல் முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்தியரான ராஜ் கபூர் மற்றும் கேட்டி முல்லன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க உள்ளனர். இதனையொட்டி விழா நடைபெறும் இடத்தில் சிவப்பு கம்பள அணிவகுப்பில் பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த ஜனவரி 23, 2025 அன்று பெவர்லி ஹில்ஸில் உள்ள சாமுவேல் கோல்ட்வின் திரையரங்கில் இந்த விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன. அனோரா, தி ப்ரூடலிஸ்ட், தி கம்ப்ளீட் அன்னோன் கான்க்ளேவ், டூன்: பார்ட் 2, எமிலியா பெரெஸ், அயம் ஸ்டில் ஹியர், நிக்கல் பாய்ஸ், தி சப்ஸ்டன்ட், விக்கட் ஹாலிவுட்டில் இருந்து ஆகிய படங்கள் இந்த முறை விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. Emilia Pérez என்ற பிரென்ச் படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத வேற்றுமொழிப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பிரேசில் தட்டிச் சென்றது. வால்டர் சால்ஸ் இயக்கிய I’M STILL HERE படத்திற்கு சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
THE BRUTALIST படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் லோல் கிராலி.
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது, “I’M NOT A ROBOT” குறும்படம்.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘டியூன் – பார்ட் 2’ திரைப்படம்.
சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘பார்ட் 2’ திரைப்படம்.
சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது No Other Land ஆவணப்படம். இந்த ஆவணப்படம் பாலஸ்தீன – இஸ்ரேல் போரை அடிப்படையாகக் கொண்டது.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை The Only Girl In The Orchestra குறும்படம் வென்றது.
எமிலியா பெரஸ் திரைப்படத்தின் ‘எல் மால்’ பாடலுக்காக கிளெமென்ட் டுகோல், கேமில் மற்றும் ஜாக் ஆடியார்ட் ஆகியோர் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர்.
எமிலியா பெரேஸ், தி சப்ஸ்டன்ஸ், அனோரா, அனுஜா, டூன் பார்ட் 2 உள்ளிட்ட பல படங்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டு நாமினேஷனில் இடம்பிடித்துள்ளன.
சிறந்த தயாரிப்புக்கான ஆஸ்கர் விருதை Wicked திரைப்படம் வென்றது.
எமிலியா பெரஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் நடிகை ஜோ சல்டானா. 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட ”எமிலியா பெரஸ்” படத்துக்கு முதல் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கீரன் கல்கின். “ஏ ரியல் பெயின்’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார் கீரன் கல்கின்.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘FLOW’ அனிமேஷன் திரைப்படம்.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது IN THE SHADOW OF THE CYPRESS படத்திற்காக ஷிரின் சோஹானி மற்றும் ஹொசைன் மொலாயெமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ‘Wicked’ படத்திற்காக வென்றார்ல் பால் டேஸ்வெல். “ஆஸ்கர் விருதை வெல்லும் முதல் கருப்பின மனிதன் நான் தான்” என பால் டேஸ்வெல் கூறியதும் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது.
சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றார் சீன் பேக்கர். ‘அனோரா’ திரைப்படத்துக்காக சீன் பேக்கருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை CONCLAVE திரைப்படம் வென்றது. இப்படத்தின் திரைக்கதைக்காக பீட்டர் ஸ்ட்ராகனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது THE SUBSTANCE திரைப்படம். பியர்-ஒலிவியர் பெர்சின், ஸ்டெஃபனி கில்லன் மற்றும் மர்லின் ஸ்கார்செலி ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர்.
சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘அனோரா’ திரைப்படம். சிறந்த எடிட்டிங்கிற்கான விருதை அனோரா படத்தின் எடிட்டர் ஷான் பேக்கர் பெற்றுள்ளார்.
Readmore: டீ பிரியர்களே… டீ குடிக்கும் போது, இதை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் மருத்துவர்!!!