ரஷ்ய எரிபொருளை வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிப்போம் என்று மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அமெரிக்காவின் சொந்த சந்தைக்காக ரஷ்யாவிடமே கைகோர்த்துள்ளார். அமெரிக்க எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக, ரஷ்யாவுடன் டொனால்ட் ட்ரம்ப் புதிய டீசல் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். இது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தையும் இரட்டை நிலைப்பாடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளுக்குப் […]

உக்ரைன் மற்றும் ஈரான்-வளைகுடா பகுதிகளில் நிலவி வரும் மோதல்களால், தானியங்கள் மற்றும் உரங்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில் உலகம் முழுவதும் ‘பெரும் உணவு நெருக்கடி’ ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். திங்களன்று நியூயார்க்கில் உள்ள ‘ஆசியா சொசைட்டி’ (Asia Society) அமைப்பு நடத்திய உரையாடல் நிகழ்வில் பேசிய அவர், உக்ரைன் மற்றும் தற்போதைய ஈரான்-வளைகுடா மோதல்கள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் […]

ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கத்தார் நாட்டின் மூலமாக 7 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாவிட்டால், தீர்க்கமான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சன் ரெசாய் (Mohsen Rezaei), கத்தார் மூலமாகத் தங்களது நிபந்தனைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், […]

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பங்கேற்ற ஐந்து நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சில மணி நேரங்களிலேயே, வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கடல் நோக்கி ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாகக் கருதப்படும் இந்த முத்தரப்புக் கூட்டுப் பயிற்சிகளுக்கு பியாங்யாங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் […]

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,03,265 அமெரிக்க டாலர்களாக உயர்த்த டிரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புதிய திட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கான செலவை கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்களுக்கே இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வரைவுத் திட்டம், திங்களன்று அமெரிக்காவின் ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம், விசா […]

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக […]

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்றிரவு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறினார். மேலும், “எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும்” ஈரானின் முக்கிய பகுதியான ‘கர்க் தீவு’ (Kharg Island) உட்பட அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்றும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் எச்சரித்தார். அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து இரண்டாவது […]

1 மாதத்திற்கு மேல் மோதல் நடந்து வரும் நிலையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவும் ஈரானும் அவசரமான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. மோதலில் ஒரு பெரிய பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.. டொனால்ட் டிரம்ப் ஒரு கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார், அது இப்போது செவ்வாய்க்கிழமை மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மத்தியஸ்தர்கள் […]

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஏறக்குறைய ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். “பிரதமர் மோடி அவர்களே, நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் மோதலுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]