இந்தியன் ரயில்வேயில் ஏஎல்பி எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பணியின் பெயர் : உதவி லோகோ பைலட்
காலிப்பணியிடங்கள் : 9,900
கல்வி தகுதி :
* 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, பி இ/ பிடெக் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
* மெக்கானிக்கல் / எலக்ட்ரானிஸ் / எலக்ட்ரிக்கல்/ ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவர்களும், 30 வயதுக்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் எவ்வளவு..?
ஆரம்ப சம்பளம் ரூ.19,900 முதல் வழங்கப்படும். இதுபோக இதர சலுகைகளும் கிடைக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* சிபிடி எனப்படும் கணிணி வழியிலான தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
* மருத்துவ பரிசோதனை
விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வு முடிந்தவுடன் ரூ.400 திருப்பி வழங்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதற்கட்ட தேர்வு முடிந்தவுடன் முழு பணமும் திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
https://www.rrbchennai.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.05.2025