fbpx

காதலிக்க மறுத்த 12 வயது சிறுமி..!! மாடி படிக்கட்டில் மறைந்திருந்த இளைஞர்..!! தாய் கண்முன்னே அரங்கேறிய சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே கல்யாண் திஷ்காவ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய காம்ப்ளே (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். எவ்வளவு முறை தனது காதலை வெளிப்படுத்தியும் அந்த சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபத்தில் இருந்த ஆதித்ய காம்ப்ளே, சிறுமியை பின் தொடர ஆரம்பித்தான். சிறுமி தினமும் மாலையில் டியூசன் செல்வதையும், அவரது தாயார் கூடவே சென்று வருவதையும் கவனித்துள்ளான். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சிறுமியை கொலை செய்ய அந்த இளைஞர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, நேற்றிரவு சிறுமி டியூசன் முடிந்து தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டிற்கு வந்து அந்த சிறுமியின் தாயார் தனது இருசக்கர வாகனத்தை பார்க் செய்து சிறுமியை அழைத்துக் கொண்டு மாடி படிக்கட்டில் ஏற முயன்றார். மாடி படிக்கட்டுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்த இளைஞர் ஆதித்ய காம்ப்ளே, திடீரென எழுந்து சிறுமியின் தாயாரை தள்ளிவிட்டு, சிறுமியை தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை தடுக்க வந்த சிறுமியின் தாயாரை மீண்டும் கீழே தள்ளிவிட்டு சிறுமியை 8 முறை குத்தியுள்ளார். அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில், தன்னிடம் இருந்த பினாயில் பாட்டிலை எடுத்து அந்த இளைஞர் குடிக்க முயன்றார். ஆனால், அவரை தடுத்து நிறுத்தி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞர் ஆதித்ய காம்ப்ளேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

உங்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லையா?… இதுதான் காரணம்!… கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

Fri Aug 18 , 2023
முன்புற பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து (Anterior Pituitary Gland) உற்பத்தியாகும் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன் தான், தாயின் மார்பகங்களில் உள்ள பால்சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க காரணியாகிறது. தாயின் மார்பகத்தை குழந்தை சப்பும்போது, காம்புகளிலுள்ள நரம்புகளிலிருந்து சமிக்ஞைகள் முன்புற பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, புரோலாக்டின் ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. இந்த புரோலாக்டின் ஹார்மோன் நேரடியாக மார்பகங்களிலுள்ள பால்சுரப்பிகளைத் தூண்டி, தாய்ப்பாலைச் சுரக்கச் செய்கின்றன. இவ்வாறு, தூண்டுதல் முதல் பால் சுரத்தல் வரை […]

You May Like