ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். அவருடைய இரண்டாவது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
பின்னர், அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது சத்தம் போட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அந்த சிறுவன் மிரட்டியுள்ளார். இதையடுத்து, சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விசாரித்தனர். அப்போது, சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தைச் சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து சிறுமியின் தாய், தேனி அனைத்து மகளிர் காவல்துறை நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனைக் கைது செய்தனர்.
Read More : Pension | எல்லாம் திருமணம் வரைக்கும் தான்..!! திருமணத்திற்கு பிறகு உங்கள் மகளுக்கு இதெல்லாம் கிடைக்காது..!!